#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,591 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-27 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,591 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,591 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,37,010 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 212 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,217 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,537 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,85,244 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,52,296 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,45,27,080 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 16,549 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025