தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,587 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,587 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,27,365 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 179 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,073 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,594 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,76,112 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,303 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,35,88,378 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 16,180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…