சென்னை:
மத்திய அரசின் சாலை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ‘சாரதி’ என்ற அப்ளிகேஷனில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகள் ‘அப்டேட்’ செய்யப்படுவதால், தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் அதிகபட்சமாக 1.56 லட்சம் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதில், செல்போனில் ேபசியபடி போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில்,
மோட்டார் வாகன சட்டம் – 1988, பிரிவு – 19 மற்றும் 1989 விதி, 21-ன்படி,
அதிக வேகம், சிவப்பு விளக்கை தாண்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், குடி போதையிலும், மொபைல் போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் உரிமங்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, 2018 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், 1.56 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
விதிமீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும்படி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், விதிமீறல் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். உரிமம் ரத்து செய்யும்முன், ஓட்டுனர்களிடம் விளக்கம் கேட்கப்படும். அதில், ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம் இருந்தால், குறுகிய காலத்தில், லைசென்ஸ் புதுப்பிக்கப்படும். லைசென்ஸ் ரத்தால், விபத்து குறையுமா என்பதை விட, விதி மீறினால் லைசென்ஸ் ரத்தாகும் என்று சில ஓட்டுனர்கள் புரிந்து வைத்துள்ளனர்.
ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டோரில், குடி போதை மற்றும் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களே அதிகம்.
இதில்,
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களில் கடந்தாண்டு, 57,158 பேரின் வாகன ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு கடந்த ஜூன் வரை மட்டும், 64,105 பேரின் வாகன ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அடுத்தபடியாக ,
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஓவர் ஸ்பீடு, ஓவர் லோடு போன்ற விதிமீறல் பிரிவுகளில் உரிமங்கள் ரத்தாகி உள்ளன. மொத்தமாக, இந்தாண்டு மட்டும் பல்வேறு விதிமீறல்களில், 1.56 லட்சம் பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாகவும், சிலருக்கு நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்த எண்ணை, மதுரையில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரி, வழக்குப்பதிவு விபரங்களின் அடிப்படையில் விதிமுறைபடி சம்பந்தப்பட்டவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்துவிடுவார். இதில், எவ்வித பரிந்துரையோ, சலுகையோ அனுமதிப்பது இல்லை. அதனால், தமிழகத்தில் நாளுக்கு நாள் ஓட்டுனர் உரிமம் ரத்தாவது அதிகரித்துள்ளது. மத்திய அரசின் சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் ‘சாரதி’ என்ற அப்ளிகேஷன் மூலம், ஓட்டுனர் உரிம ரத்து நடைமுறைகள் பின்பற்றப்படுவதால், எங்கு சென்றாலும் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
DINASUVADU
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…