“1,56,000 பேர் இனிமேல் வாகனம் ஓட்ட முடியாது” லைசென்ஸ் இரத்து..!!

Default Image

சென்னை:

மத்திய அரசின் சாலை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ‘சாரதி’ என்ற அப்ளிகேஷனில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகள் ‘அப்டேட்’ செய்யப்படுவதால், தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் அதிகபட்சமாக 1.56 லட்சம் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதில், செல்போனில் ேபசியபடி போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில்,

மோட்டார் வாகன சட்டம் – 1988, பிரிவு – 19 மற்றும் 1989 விதி, 21-ன்படி,

அதிக வேகம், சிவப்பு விளக்கை தாண்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், குடி போதையிலும், மொபைல் போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் உரிமங்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, 2018 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், 1.56 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

Image result for குடி போதையில் வாகனம் ஓட்டுதல்

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

விதிமீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும்படி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், விதிமீறல் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். உரிமம் ரத்து செய்யும்முன், ஓட்டுனர்களிடம் விளக்கம் கேட்கப்படும். அதில், ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம் இருந்தால், குறுகிய காலத்தில், லைசென்ஸ் புதுப்பிக்கப்படும். லைசென்ஸ் ரத்தால், விபத்து குறையுமா என்பதை விட, விதி மீறினால் லைசென்ஸ் ரத்தாகும் என்று சில ஓட்டுனர்கள் புரிந்து வைத்துள்ளனர்.

Related image

ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டோரில், குடி போதை மற்றும் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களே அதிகம்.

இதில்,

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களில் கடந்தாண்டு, 57,158 பேரின் வாகன ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு கடந்த ஜூன் வரை மட்டும், 64,105 பேரின் வாகன ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Image result for செல்போனில் பேசியபடி வாகனம்

அடுத்தபடியாக ,

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஓவர் ஸ்பீடு, ஓவர் லோடு போன்ற விதிமீறல் பிரிவுகளில் உரிமங்கள் ரத்தாகி உள்ளன. மொத்தமாக, இந்தாண்டு மட்டும் பல்வேறு விதிமீறல்களில், 1.56 லட்சம் பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாகவும், சிலருக்கு நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதில், இந்தாண்டு மட்டும் உயிர்பலி ஏற்படுத்தக் கூடிய வகையில் விபத்துகளை ஏற்படுத்திய ஓட்டுனர்கள் 2,658 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்தாகிய நிலையில், அவர்களில் சிலர் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றுபவரும் அடங்குவர். ஓட்டுனர் உரிமங்கள் உடனடியாக ரத்தாவதற்கு, புதிய முறையிலான ‘சாப்ட்வேர்’ தான் காரணம். உதாராணமாக, மதுரையில் பதிவு பெற்ற வாகனம், சென்னையில் சாலை விதிகளை மீறி இருந்தால், சம்பந்தப்பட்டவரின் ஓட்டுனர் உரிம பதிவெண்ணை கொண்டு சில பிரிவுகளில் இங்கு போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, ‘சாப்ட்வேரில்’ அப்டேட் செய்வர்.
அந்த எண்ணை, மதுரையில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரி, வழக்குப்பதிவு விபரங்களின் அடிப்படையில் விதிமுறைபடி சம்பந்தப்பட்டவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்துவிடுவார். இதில், எவ்வித பரிந்துரையோ, சலுகையோ அனுமதிப்பது இல்லை. அதனால், தமிழகத்தில் நாளுக்கு நாள் ஓட்டுனர் உரிமம் ரத்தாவது அதிகரித்துள்ளது. மத்திய அரசின் சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் ‘சாரதி’ என்ற அப்ளிகேஷன் மூலம், ஓட்டுனர் உரிம ரத்து நடைமுறைகள் பின்பற்றப்படுவதால், எங்கு சென்றாலும் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்