தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய இதுவரை 1,51,151 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களுக்கு காவல்துறை நூதன முறையில் பல்வேறு தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இதனிடையே ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,51,151 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,19,286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.53,72,004 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…