கபினி அணையில் இருந்து 1,50,000 கன அடி நீர் திறப்பு !
தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணாராஜா சாகர அணைகள் வேககமாக நிரம்பி வருகிறது.கபினி அணை நிரம்பி உள்ள நிலையில் வினாடிக்கு 1,25000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
கபினி அணைக்கு அருகில் உள்ள தாரக மற்றும் நாகுல் தடுப்பணையில் இருந்து 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டு மொத்தமாக 1,50,000 கன அடி நீர் காவேரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு தான் கபினி அணையில் இருந்து 1,00,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.இந் நிலையில் தர்மபுரியில் உள்ள ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணாராஜா சாகர அணையில் இருந்து 500 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.ஆனால் இந்த அணைக்கு வினாடிக்கு 1,15,000 கன அடி நீர்வரத்து உள்ளதால் இன்று இரவு அல்லது நாளை காலை தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் அப்படி திறக்கப்பட்டால் இன்னும் இரண்டு நாள்களில் ஒகேனக்கலுக்கு 2,50,000 கன அடி நீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.