1500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தி வைப்பு- பள்ளி கல்வித்துறை உத்தரவு
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1500 ஆசிரியர்கள் ,தகுதித்தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர்களின் ஊதியத்தை நிறுத்தி பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் கொடுக்கப்பட்டது.இதில் தேர்ச்சி பெறாத சுமார் 1500 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரலுடன் 5 ஆண்டுகால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான ஊதியத்தை அனுப்பாமல் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது