ஸ்டெர்லைட் தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது.
பின் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு டிசம்பர் 10 ஆம் தேதி ஒத்திவைப்பதாக பசுமைத்தீர்ப்பாயம் தெரிவித்தது.இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.அதில் நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை.தூத்துக்குடியில் மோசமான நிலைமைக்கு நிலத்தடி நீர் செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை. நிலத்தடி நீர் மாசு காரணமாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டது என்று தெரிவித்தது.அதற்கு
2014 – 2018 வரை நோட்டீஸ் எதுவும் அனுப்பப்பட்டதா? என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கில் விசாரணை நிறைவுபெற்றது. ஸ்டெர்லைட் வழக்கில் வரும்(டிசம்பர் 17 ஆம் தேதி) திங்கள் கிழமைக்குள் அதாவது நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு பிறகு தூத்துக்குடி இயல்பு நிலையில் இருக்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…