போலியாக சேர்ந்த 1500 பேர், 60 லட்சம் ரூபாய் இழப்பு- கிசான் திட்டத்தில் தொடர்ந்து முறைகேடு.!

Default Image

கரூரில் பிரதமர் கிசான் திட்டத்தில் போலியாக 1500 பேர் சேர்க்கப்பட்டது மற்றும் ரூ.60 லட்ச மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டு நிதி வழங்கப்படும் கிசான் திட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 78,517 விவசாயிகள் பயனாளிகளாக உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 3,282 பேர் விவசாயிகளாக பதிவு செய்துள்ளனர்.

அதில், சுமார் 1,500 பேர் போலி என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இரண்டு தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், ரூ.60 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபர்களின் சிட்டா அடங்கல், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக, முக்கிய நபர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் தொடர்ந்து முறைகேடு நடந்து வருவதால், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தற்காலிகமாக இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று வேளாண்துறை இணை அதிகாரிகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 14 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்