தூத்துக்குடியில் கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.1,500 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்…!

Default Image

மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் கப்பலில் சந்தேகப்படும்படியாக 6  கண்டெய்னர் பெட்டிகளை மடக்கிப் பிடித்துள்ளனர்.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடிக்கு வரும் கண்டெய்னர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது பிரேசில் நாட்டிலிருந்து தூத்துக்குடியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு மரக்கட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டது. அந்த மரக்கட்டைகள் கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு பனாமா நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து மரக்கட்டைகள் வைக்கப்பட்ட 8 கண்டெய்னர்கள் கப்பல் மூலம் இலங்கை வழியாக தூத்துக்குடிக்கு நேற்று அதிகாலை வந்து சேர்ந்துள்ளது.

அப்போது, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் கப்பலில் சந்தேகப்படும்படியாக 8 கண்டெய்னர் பெட்டிகளை மடக்கிப் பிடித்துள்ளனர்.  28 கருப்பு நிற சிறிய மூட்டைகள் மொத்தம் 28 முட்டைகள் இருந்துள்ளது. அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதற்குள், 300 கிலோ எடை கொண்ட கொகைன் போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.1,500 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் பறிமுதல்  செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்