மே 4 முதல் ஒரு நாளைக்கு 150 பேர் வீதம் இலவச பொருட்கள்.! – அமைச்சர் காமராஜ் தகவல்.!
மே மாதத்திற்கான விலையில்லா நியாய விலைக்கடைபொருட்கள் மே-4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பல தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் தமிழக அரசு ரேஷன் கடை பொருட்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்து ஏப்ரல் மாத பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அடுத்து, மே மாத ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், மே மாதத்திற்கான விலையில்லா நியாய விலைக்கடைபொருட்கள் மே-4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார். மேலும், ‘ஒரு நாளைக்கு 150 பேர் வீதம் நியாயவிலை கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்.’ என அவர் தெரிவித்தார்.