திடீர் காட்டாற்று வெள்ளம்., ஸ்ரீவில்லிபுத்தூரில் சிக்கிய 150 பக்தர்கள்.!
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கிய 150 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஊர் பகுதியை மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்த கோயில் பக்கம் அத்தி துண்டு ஓடை உள்ளது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராக்காட்சி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது பலர் அத்தி துண்டு ஓடை பகுதியில் குளித்து வந்துள்ளனர். ஏற்கனவே அப்பகுதியில் நேற்று பெய்து வந்த மழை காரணமாக, மாலையில் ஓடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
திடீர் காட்டாற்று வெள்ளத்தை கண்டு சுதாரித்த மக்க, ஓடைக்கு அந்தப்பக்கம் சென்று பாதுகாப்பாக மழையோடு நனைந்தபடி நின்றுவிட்டனர். பிறகு ராஜபாளையம் தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டாற்று வெள்ளத்தால் ஆற்றை கடக்க முடியாமல் இருந்த பக்தர்களை, சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
இந்த காட்டாற்று வெள்ளத்தில் 150 பேர் சிக்கி இருந்தனர். அதில் 40 பேர் பெண்கள் ஆவார். இவர்கள் அருகில் உள்ள சிவகாசி, சத்திரப்பட்டி, ராஜபாளையம் பகுதிகளை சேர்ந்த ஊர்மக்கள் ஆவார்.