நாளை முதல் தூத்துக்குடியில் 150 பேருந்துகள் இயக்கப்படும் – ஆட்சியர் சந்தீப்!

நாளை முதல்தூத்துக்குடியில் தூத்துக்குடியில் 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் கடந்த 2 மாதத்துக்கு மேலாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாமல் உள்ளது. தற்பொழுது மக்கள் நலன் கருதி தளர்வுகளை அரசு அறிவித்துள்ளதால் பேருந்துகள் கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை முதல் பேருந்துகள் இயக்கலாம் எனவும், நாளை முதல் 150 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.