பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை!

Published by
Rebekal
தாரமங்கலம் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாரமங்கலம் அருகே 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விசாரித்த போலீசார் ஏற்கனவே இரண்டு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் அம்பேத்கர் நகரில் வசித்து வரக்கூடிய 15 வயது சிறுமியை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் வயிற்று வலி காரணமாக பெற்றோர்கள் தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து பார்த்த பொழுது அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த 11ஆம் தேதி சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் சிறுமி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த சிறுமியின் உறவினர்களான 2 வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனாலேயே சிறுமி கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றதும் தற்பொழுது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் ஆகிய சரண்குமார், சண்முகராஜா ஆகிய இருவரிடம் தாரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அச்சிறுமி வசித்து வரக்கூடிய வீட்டருகே உள்ள மக்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வாலிபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

2 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

4 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

4 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

6 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

7 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

7 hours ago