திருப்பூர்: இன்ஸ்டாவில் 17 வயது சிறுவனை காதலித்த 15 வயது சிறுமி நகைகளுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி சமூக ஆப்பான இன்ஸ்டா மூலம் 17 வயது சிறுவனின் அறிமுகம் பெற்று பேசி வந்திருக்கிறார். அதன் பின் இருவரும் இன்ஸ்டாவில் தங்களது காதலை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், அந்த 17 வயது சிறுவன், அந்த சிறுமியிடம் ‘ஐபோன் வாங்கி தா’ என்று கேட்டுருக்கிறார்.
இதனால், அம்மாவின் 7 சவரன் நகைகளுடன் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். மேலும், நகைகளுடன் சிறுமியை காணாமல் போனதால் பதற்றமடைந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல் துறைக்கு புகார் அளித்துள்ளனர். தீவிர தேடுதலின் மூலம் காவல் துறையினர் அந்த சிறுமியின் இருப்பிடத்தை கண்டுபுடித்துள்ளனர்.
அதன் பின், பிடிபட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமியின் அம்மாவின் நகைகளை விற்று ஆளுக்கு ஒரு ‘ஐபோன்’ வாங்கியதாக தெரியவந்துள்ளது. மேலும், அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…