மதுரை மத்திய சிறையிலிருந்து மேலும் 15 ஆயுள் கைதிகள் விடுதலை..!
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை சிறையிலிருந்து மேலும் 15 ஆயுள் கைதிகள் விடுதலை.
தமிழக்கத்தில் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்து வருகின்றன.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் சுமார் 700 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, மதுரை மத்திய சிறையிலிருந்து அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து முதல் கட்டமாக 22 கைதிகள் கடந்த 24 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக மேலும் 15 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.