புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை! வேதனை தெரிவிக்கும் நீதிபதிகள்!
இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் உள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யா பிரகாசம் கொரோனா ஊரடங்கின் போது மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள் திருப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமையை குறிப்பிட்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்கள், புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது என்றும், பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக இந்தியா மாறியுள்ளது என்றும், இந்தியாவில் புலம்பெயந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், திருப்பூரில் அசாம் பெண்ணை 4 பேர் பாலையால் வன்கொடுமை செய்த விவகாரத்தில், நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.