சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15 பேர் நீக்கம்- ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு..!
சசிகலா உடன் தொலைபேசியில் பேசிய அனைவரும் கட்சியில் இருந்து நீக்கம் ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி உத்தரவு.
முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
- M. ஆனந்தன்,(முன்னாள் அமைச்சர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர்)
- V.K. சின்னசாமி, Ex M.P. (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முன்னாள் வாரியத் தலைவர்)
- LK.M.B வாசு (அனைத்துலக எம்ஜி ஆர். மன்ற துணைச் செயலாளர் )
- சோமாத்தூர் ஆ.சுப்பிரமணியம்,(அனைத்துலக எம்.ஜி ஆர். மன்ற துணைச் செயலாளர்)
- I. வின்சென்ட் ராஜா(மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச்செயலாளர் )
- பருத்தியூர் KMK நடராஜன், (மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர்)
- V. அருள்ஜோதி, (மாவட்டக் கழக துணைச் செயலாளர்)
- D. சுஜாதா ஹர்ஷினி, (மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்)
- அம்மா S. சிவா, (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்)
- R.பில்மூர் ராபர்ட், (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்)
- ஸ்ரீதேவி பாண்டியன்,(129 ஆவது வட்ட புரட்சித் தலைவிபேரவை இணைச் செயலாளர் விருகம்பாக்கம் வடக்கு பகுதி)
- E. ராஜேஷ்சிங், (சேப்பாக்கம் வடக்கு பகுதி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்)
- ஒட்டக்காரன் N.ராஜூ, (சேப்பாக்கம் வடக்கு பகுதி மாணவர் அணித் தலைவர்)
- N.சதீஷ் (எ) கண்ணா (சேப்பாக்கம் வடக்கு பகுதி இளைஞர் பாசறை, இனம் பெண்கள் பாசறை துணைத் தலைவர், 62 தெற்கு வட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)
- V.ராமச்சந்திரன், (மதுரை வடக்கு 3-ஆம் பகுதிக் கழக துணைச் செயலாளர் )
ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய
முன்னாள் அமைச்சர் ஆனந்தன்உள்ளிட்ட 15 பேர் நீக்கம்..! pic.twitter.com/Ccwkwq6GXk— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) June 14, 2021