15வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்பில் தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்களை திருத்துவது குறித்து மத்திய அரசிடம் மனு அளிக்க தமிழக அரசு முடிவு …!
தமிழக அரசு 15வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்பில் தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்களை திருத்துவது குறித்து மத்திய அரசிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 15வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்புகளில் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முடிவு தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பிரதமருக்கும், மத்திய நிதி அமைச்சர் மற்றும் நிதி ஆணையருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாகவும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நிதி ஆணையத்திடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய நிதி ஆணையம் தமிழகத்திற்கு வரும்போது, 15வது நிதிக்குழு ஆய்வு வரம்பின் பாதகமான அம்சங்களை திருத்துவது குறித்து எடுத்துரைக்கப்படும் என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.