புதியதாக உருவான 13 நகராட்சிகள்… தூத்துக்குடியில் இணைக்கப்பட்ட 7 ஊராட்சிகள்! விவரம் இதோ…
16 மாநகராட்சிகளுடன், 149 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. அதில் தூத்துக்குடியில் 7 ஊராட்சிகள் இணைக்கப்ட்டுள்ளன.
தூத்துக்குடி : மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்களை கருத்தில் கொண்டு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் எழுகின்றது எனக் கூறி தமிழக அரசு தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து புதிய நகராட்சிகள் பேரூராட்சிகள் அமைக்க 5 அரசாணைகளை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு இணைக்கப்படுவதன் மூலம், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் பகுதிகள் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம், மருத்துவ வசதிகளும் மக்களுக்கு கிடைக்க ஏதுவாக அமையும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஆறு புதிய மாநகராட்சிகள், 28 நகராட்சி, 11 பேரூராட்சி உருவாக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை என 4 நகராட்சிகள் அருகில் உள்ள 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டன.
தற்போது, 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 05.01.2025ஆம் தேதியன்று நிறைவடைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புரத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள். நகராட்சிகளுடன் இணைக்கவும். பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
அரசு, இச்செயற்குறிப்புகளை பரிசீலித்து, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும். திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும். கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு. காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும். 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தக்க சட்டவகைமுறைகளின் கீழ் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி :
இந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாநகராட்சி உடன் சுற்றியுள்ள 7 ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி, மாப்பிள்ளையூரணி, சில்லா நத்தம், அய்யனடைப்பு, கோரம்பள்ளம், மறவன் மடம், முள்ளக்காடு மற்றும் குமரகிரி ஆகிய 7 ஊராட்சிகள் தூத்துக்குடி மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.