தமிழகம் முழுவதும் நாளை முதல் 14,757 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச்செல்லும் வசதிக்காக தமிழகம் முழுவதும் 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் தற்போது குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் நாளை முதல் 3 நாட்களுக்கு இயக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக இயக்கப்படும் 14,757 பேருந்துகளில் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு 9,510 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் 11-ஆம் தேதி அதாவது நாளை 2,225 பேருந்துகளும், 12-ஆம் தேதி 3,705 பேருந்துகளும், 13-ஆம் தேதி 3,580 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்களுக்கு 5,247 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள ஐந்து சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, கூடுதலாக 310 சிறப்பு இணை பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…