மத்திய அரசிடம் ரூ.1,463 கோடி நிதியுதவி கேட்பு – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மத்திய அரசிடம் ரூ.1,463.86 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது என உடுமலை ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம், தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனு அளித்துள்ளார். கால்நடை பராமரிப்பினை ஊக்குவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். நோய் கட்டுப்படுத்துதல், இனப்பெருக்க வசதி, தீவண மேலாண்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்த நிதி கேட்கப்பட்டுள்ளது.
மேலும், உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாத்திட, தீவனத்தை சிறந்த முறையில் உபயோகித்திட மத்திய அரசிடம் நிதியுதவி கேட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.