தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை… ஆட்சியர் உத்தரவு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 14 ஆம் தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வ திருவிழாவை நடைபெற உள்ளதை அடுத்து, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார் ஆட்சியர் செந்தில்ராஜ். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுதும் இன்று மாலை 6 மணி முதல் வரும் மே 14 ஆம் தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் கூடுவதற்கும்(5 அல்லது மேற்பட்ட நபர்கள்), ஆபத்தான ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருவதற்கும் தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.