#BREAKING: சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு..!

Default Image

சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏற்கனவே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய விஐபிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்ட சில காரணங்களால் யாருக்கும் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சிதம்பரம் நகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாத காலத்திற்கு தடை விதித்து வருவாய் கோட்டாட்சியர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக வருவாய் கோட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். அரசின் முடிவு வரும் வரை எந்த வித போராட்டமோ , ஆர்பாட்டமோ நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்