தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை – தமிழக அரசு அதிரடி.!
கொரோனாவை அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்தார் முதல்வர் பழனிசாமி. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளான மருந்து, காய்கறி, பால், மளிகை போன்ற கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடப்படும்.
வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவளிக்கும் உணவகங்கள் திறக்கலாம் என்றும் தனியார் நிறுவனங்கள், ஐடி பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை நாட்களில் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி இயங்காது என்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களின் எல்லைகளையும் மூடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 9 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.