தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை!
மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாமன்னர், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 308-ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவனின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.