கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த 14 வயது சிறுவன் .!

Published by
murugan
  • கடந்த ஆறாம் தேதி புருஷோத்தமனை காணவில்லை என கூறி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • நேற்று புருஷோத்தமன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக கிடந்தார்.

செங்கல்பட்டு அடுத்து உள்ள வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி உஷா இவர்களுக்கு புருஷோத்தமன் என்ற 14 வயது மகன் உள்ளர்.இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி புருஷோத்தமனை காணவில்லை என அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை எனக் கூறி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று அரசு தொழிற்பயிற்சி மையம் அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் உடல் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே காவல்துறை, தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் கிணற்றில் மிதந்த உடல் காணாமல் போன புருஷோத்தமன் என கண்டுபிடிக்கப்பட்டது.

புருஷோத்தமன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா..?என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புருஷோத்தமன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

Published by
murugan
Tags: armsdeadwell

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

3 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

4 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

5 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

6 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

7 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

8 hours ago