சென்னையில் மின்சாரம் தாக்கி 14வயது சிறுவன் பலி! அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்த போலீசார்!
சென்னை மவுலிவாக்கம் பகுதியில் மெட்ரோ குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்துள்ளது அந்த பள்ளத்தை சரிவர மூடப்படாமல் மண்ணை வைத்து மூடிவிட்டு சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது மழை பெய்ததால் அந்த பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்து உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த செந்தில் வனிதா தம்பதியினரின் மூத்த மகனான தீணா என்ற 14 வயது சிறுவன் தவறுதலாக அந்த பள்ளத்தில் கால் வைத்து விட்டார். அப்போது அதில் அறுந்து கிடந்த கேபிளில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
தகவல் தெரிவித்து, 2 மணிநேரமாக போலீசார் வராததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களி சமாதானம் செய்து, தற்போது தீணாவின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அச்சாபத்திற்கான நடவடிக்கையாக மாநகராட்சி மண்டல பொறியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் கீழ் 304/B என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.