தமிழகத்தில் இயல்பை விட 14 சதவீதம் மழை குறைவு – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!
தமிழகத்தில் இயல்பை விட 14 சதவீத மழை குறைவு என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் குளம்போல காட்சியளிக்கிறது. இந்தநிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என கூறினார். மேலும், 29.11.2020 வரை இயல்பான மழை 352.6 மி.மீட்டர் பெய்திருக்க வேண்டும். ஆனால் 301.8 மி.மீட்டர் மழையே பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். இது இயல்பை விட 14 சதவீதம் குறைவு என தெரிவித்துள்ளார். மேலும், 24 மணிநேரமும் நீர் தேக்கங்கள் கண்காணிக்க படுவதாகவும் அவர் உரையில் தெரிவித்தார்.