மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த 14 பேர் – 3 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவு!
மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரையிலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி அவர்கள் 14 பேரின் குடும்பத்துக்கும் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை சேர்ந்த பகவதி நாடார் என்பவரின் மகன் ராமையா, அகத்தீஸ்வரர் திருநந்தகுமார் என்பவர், நீலகிரி மாவட்டம் விஜயலட்சுமி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜெய்சங்கர், கரம்பக்குடி வட்டத்தை சேர்ந்த கருப்பையா, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சரோஜா, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த விமல் காந்த், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ரெங்கநாதன், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன், கள்ளகுறிசி மாவட்டத்தை சேர்ந்த மங்களநாயகி ஆகியோரும்,
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராம்பிப் பிரசாத், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சவுரிராஜன், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 14 பேருக்கும் நிதி உதவி வழங்க அறிவித்துள்ளார். இந்த துயர சம்பவங்கள் முதல்வருக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.