திருச்சி மாவட்டத்தில் நடுப்காட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து 14 மணி நேரமாக விடிய விடிய மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
27 அடியில் இருந்த இந்த சிறுவன் 68 அடி ஆழத்திற்கு சென்று இருந்த நிலையில் தற்போது 70 அடிக்கு சென்று உள்ளார்.ஆழ்துளை கிணற்றில் உள்ள சிறுவருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறுவன் சுர்ஜித் மூச்சு விடுவதில் எந்த வித சிரமம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மீட்பு படையினர் இன்னும் சிறிது நேரத்தில் வர உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் மத்தியபிரதேசத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் 110 அடியில் இருந்து 35 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…