அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமை .!
புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்கள் வெளிமாநிலத்திற்கு அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்கள் வெளிமாநிலத்திற்கு அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் , குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அங்கு கொரோனா தொற்றின் தாக்கம் எப்படி உள்ளது. மாநில அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்டார்.
அதற்கு நான் மாஹே, ஏனாம், காரைக்கால் பகுதிகளில் கொரோனா தொற்று எதுவும் இல்லை. புதுச்சேரியில் மட்டும் 4 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநில அரசின் சார்பில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம் எல்லைகளை மூடி வெளிமாநிலத்தினர் உள்ளே வராமல் நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினேன். அவரும் உங்கள் பணியை நான் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார் என முதல்வர் நாராயணசாமி கூறினார்.