யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமை – கோவை ஆட்சியர் அறிவிப்பு.!

Default Image

பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் யாராக இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதும் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2323 ஆக உள்ளது. குறிப்பாக நேற்று சென்னையில் மட்டும் 132 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு இதுவரை 906 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், பாதிப்பு குறைவான பகுதிகளில் மட்டும் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்படும் என்று மருத்துவ நிபுணர் குழு, முதல்வரிடம் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. இதனிடையே ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு அறிவிப்புக்களை அறிவித்து வருகிறார்கள். அதுபோன்று திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு வெளியே செல்லும் போது குடையை எடுத்து செல்ல வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர்கள் வலுயுறுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் யாராக இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அறிவித்துள்ளார். இதனிடையே கோவையில் இதுவரை 141 பாதிக்கப்பட்டதில், 125 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும், கோவை மாவட்டத்தில் 7 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்