சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 12 நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது.
இதைதொடர்ந்து, 3 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி ஹேமா முன் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேருக்கும் ஜூலை 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவு பிறப்பித்தார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து 3 பேரும் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ரகு கணேஷை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தெடர்ந்து ரகு கணேஷ் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…