#BREAKING: சாத்தான்குளம் விவகாரம்.! 3 காவலர்களுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்.!

Default Image

சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார்  12 நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது.

இதைதொடர்ந்து, 3 பேரையும்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி ஹேமா முன் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர் முருகன் ஆகியோரை ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேருக்கும் ஜூலை 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவு பிறப்பித்தார்.  நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து 3 பேரும் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ரகு கணேஷை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தெடர்ந்து ரகு கணேஷ் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Kachchatheevu - BJP
a RASA - Sekar Babu
krishnamachari srikkanth ravichandran ashwin
MKStalin TNAssembly
Nithyananda