ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளையின் அறிவுறுத்தலை திறந்து திருத்திய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களையும் ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக்கு அருகே, மாவட்டத்திற்குள் வசிப்போருக்கு முன்னுரிமை தந்து ஆசிரியர்களாக நியமிக்கலாம், திறமை அடிப்படையில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணியில் திருப்தி அளிக்கவில்லை என்றால், உடனே பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். தேர்வான விண்ணப்பதாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனை பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் வரும் 4 முதல் 6-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும். சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரத்தை வரும் 6-ம் தேதி இரவுக்குள் ஆணையரகத்துக்கு பள்ளிகள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…