இதுவரை 134 கோடி ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதி திட்டத்திற்கு வந்துள்ளது.!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், நிவாரண உதவிக்காகவும், மத்திய மாநில அரசுகள் பொதுமக்களின் தங்களால் இயன்ற நிவாரண நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை அளித்தனர். தமிழக அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 134.63 கோடி ரூபாய் நிதி வசூல் ஆகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்காக நிதியுதவி அளித்த அனைவர்க்கும் முதல்வர் பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் அதிகபட்சமாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலமாக 14.10 கோடி ரூபாய் நிதியளித்துள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பாக 1 கோடி ரூபாய், நடிகர் அஜித்குமார் 50 லட்சம் ரூபாய், நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் என பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024