காதலனை சந்திக்க செண்டருக்கு உதவுவதாக கூறிய பலாத்காரம் செய்த மூவர் கைது.
கோழிக்கோடு முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயதே ஆகக்கூடிய எட்டாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலமாக கிருஷ்ணகிரியை சேர்ந்த 22 வயதுடைய தரணி என்பவர் பழக்கம் ஆகி உள்ளார், நாளடைவில் இது காதலாக மாற கிருஷ்ணகிரி சென்று தனது காதலனை பார்க்க விரும்பியுள்ளார் மாணவி. இந்நிலையில் மாணவிக்கு ஏற்கனவே அறிமுகமான கோழிக்கோடை சேர்ந்த விபின் ராஜ் என்பவரிடம் இது குறித்து கூறும் பொழுது, அவர் இதற்கு உதவி செய்வதாக காரில் அழைத்துச் செல்கிறேன் எனக் கூறி தனது நண்பர்கள் அகித் ராஜ் மற்றும் ஜோபின் ஆகிய இருவரையும் கூட்டிக்கொண்டு மாணவியுடன் காரில் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர்கள் காரை நிறுத்திவிட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பின் ஓசூர் பஸ் நிலையம் அருகே மாணவியை இறக்கிவிட்டு சென்றுவிட்ட நிலையில், மாணவி தனது காதலனுக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்ததை அடுத்து தரணி அந்த மாணவியை தன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகளை காணவில்லை என மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவரது செல்போன் நம்பரை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மாணவி கிருஷ்ணகிரியில் இருப்பது தெரியவந்துள்ளது. தரணியின் வீட்டுக்கு சென்று மாணவியை மீட்டு உள்ளனர். பின்பு, மாணவி அளித்த புகாரின் பேரில் விபின் ராஜ், அகித் ராஜ் மற்றும் ஜோபின் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ததுடன், மாணவியின் காதலன் மீது மைனர் பெண்ணை கடத்தியதாக வழக்கு போடப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…