தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ் 13 தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு முதல்வர் அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படக் கூடிய சுகாதார சேவைகள் சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் கருத்துகள் பெறப்பட்டு, இந்த கருத்துக்கள் தேசிய குழு நிபுணர்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு பரிசு தொகையும் தேசிய சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி வருகிறது. இந்நிலையில் மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் 2019 – 20 வரையான ஆண்டிற்கான சான்றிதழை தமிழகத்தில் 13 உள்ள மருத்துவமனைகள் பெற்றுள்ளது.
தமிழகத்தில் இருந்து காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தாம்பரம், ஆம்பூர், திருப்பத்தூர், சோளிங்கர், அரூர், திருச்செந்தூர், அருப்புக்கோட்டை, பரமகுடி, ஸ்ரீரங்கம் மேட்டுப்பாளையம், ராசிபுரம், ஓசூர் ஆகிய 13 தமிழக அரசு மருத்துவமனைகளும் தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய தர சான்றிதழ் மற்றும் பரிசு தொகையாக 2.53 கோடி பணத்தையும் அரசு மருத்துவமனைகளின் தலைமை மருத்துவ அலுவலரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கியுள்ளார்.காலியாக உள்ள 138 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…