ஒரு ஐஜி, 12 எஸ்பிக்கள் என மொத்தம் 13 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த துணை ஆணையர் விமலா உள்பட 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு ஐஜி, 12 எஸ்பிக்கள் என மொத்தம் 13 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் விமலா, லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் துணை ஆணையராக இருந்த அரவிந்த், சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத், கன்னியாகுமரி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், செங்கல்பட்டு எஸ்பியாகவும், சென்னை போலீஸ் அகாடமி துணை இயக்குநர் ஜெயலட்சுமி, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளனர். மேலும் ரயில்வே ஐஜியாக இருந்த கல்பனா நாயக், மின்வாரிய பிரிவு விஜிலன்ஸ் ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்ட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…