பாஜகவில் மேலும் 13 நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்.! ஐ.டி. விங் தலைவர் அறிக்கை!

Default Image

சென்னை மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகல்.

பாஜக நிர்வாகிகள் விலகல்:

பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுவில் இருந்து நிர்மல் குமார் மற்றும் திலிப் கண்ணன் விலகி அதிமுகவில் இபிஎஸ் முன்னிலையில் இணைந்தனர். இதற்கு பாஜக தரப்பில் கண்டனம் தெரிவித்து, இதனால் அதிமுக – பாஜக இடையே மோதல் நிலவி வருகிறது.

சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள்:

இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட பாஜக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். பாஜகவில் இருந்து ஐடி பிரிவில் இருந்து மேலும் 13 பேர் விளக்கியுள்ளனர். சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஒரத்தி.அன்பரசு உள்ளிட்ட 13 பேர் பாஜகவில் இருந்து விளங்கியுள்ளனர். சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவை சேர்ந்த 10 செயலாளர்கள், 2 துணை தலைவர்கள் பாஜகவில் ராஜினாமா செய்துள்ளனர்.

ஐடி விங் பிரிவு தலைவர் அறிக்கை:

சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. விங் பிரிவு தலைவர் ஒரத்தி.அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் சில காலமாக அசாதாரன சூழ்நிலை நிலவி வந்த நிலையில், ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரே சமயத்தில் அழைக்க முற்படும்பொழுது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது. ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக பாஜக-வில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒருசில ஆண்டுகள்தான், பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன் அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்கும் தெரியும். என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு நான் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது.

தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை. துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரம் ஆகவே இதை செய்கிறேன். நிச்சயமாக தி.மு.க-வில் இணையமாட்டேன். திமுக-வை விமர்சிக்கவே பாஜக-வில் இருந்து விலகுகிறேன். தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வான நன்றிகள்.

அதிமுகவில் இணைய திட்டம்:

மேலும், என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களது வலியுறுத்தலின் பேரிலும் அன்புக்குரிய தலைவர் திரு C.T.R நிர்மல் குமார் அவர்களுடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் பாஜகவில் இருந்து விலகிய 13 பெரும் கையெழுத்து இட்டுள்ளனர். மேலும், பாஜகவில் இருந்து விலகிய 13 பேரும் நிர்மல் குமாரை பின்பற்றி அதிமுகவில் இணைய போவதாகவும் தகவல் கூறப்படுகிறது.

chennaiwestbjp

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்