சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்த பிபின் ராவத் உட்பட 13 பேர் உடல்கள்..!

Default Image

தற்போது சூலூர் விமானப்படை தளத்திற்கு 13 பேரின் உடல்களும் வந்தன.

நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.

முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன. நாளை இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. இதனால், வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்  உட்பட 13பேரின் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது.  வழிநெடுக்கில் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், தற்போது சூலூர் விமானப்படை தளத்திற்கு 13 பேரின் உடல்களும் வந்தன.

இங்கிருந்து ஒரு இராணுவ சிறப்பு விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் டெல்லிக்கு கொண்டு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூலூர் விமானப்படை தளத்தின் வெளியே மக்கள் குவிந்து மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்