தமிழகத்தில் 3வது மாணவி தற்கொலை, விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் முடிவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் மாணவிகள் தற்கொலை பட்டியலில் தற்போது விருத்தாசலம் மாணவியின் மரணமும் இணைந்துவிட்டது. அதாவது, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆயியார் மடத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் உள்ள அறையில் துணியால் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், பெற்றோர்கள் இறுதி சடங்கு செய்ய முற்பட்ட போது, காவல்துறையினர் அதிரடியாக மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாகவும், போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு விவகாரம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது. தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்குள் மூன்றாவது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…