1290 படகுகள் தமிழகம் வந்து சேர்ந்தன!
தமிழக மீனவர்களின் 1290 படகுகள் பத்திரமாக தமிழகம் வந்தடைந்தது.
கியார் புயலால் அரபிக் கடலில் சிக்கி தவித்த தமிழா மீனவர்களின் 1290 படகுகள் பாதுகாப்பாக தமிழகம் வந்தடைந்துள்ளது. மேலும், 6 படகுகளில் மீனவர்கள் பத்திரமாக மீன் பிடித்துக் கொண்டிருப்பதையும் இந்திய கடற்படை உறுதி செய்துள்ளது.
இதனையடுத்து, மகா புயல் வலுவிழக்கும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.