ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்துக்கு பதில் புதிய கட்டடம் கட்டப்படும் என பேரவையில் அறிவிப்பு.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 105 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் நோயாளிகள் அனைவரும் உடனடியாக வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர் என தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பெற்றவையில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 10 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கட்டடத்தை பராமரிக்காததால் தீ விபத்து ஏற்பட்டது. அரசு மேற்கொண்ட அதிதீவிர பணி காரணமாக ஒரு உயிர் போன நிலை என்பது கூட இல்லை. இதுவே வேறு ஆட்சி, வேற முதலமைச்சராக இருந்திருந்தால், யாரும் கண்டுக்காமல் இருந்திருந்தால் 128 பேர் பலியாகியிருப்பார்கள். முதலமைச்சர் எடுத்த வேகமான நடவடிக்கையால் 128 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை கட்டங்களை கட்டியது திமுக தான், சுண்ணாம்பும் அடித்து திறந்து வைத்தது நீங்கள் என அதிமுகவை விமர்சித்தார். முழுமையாக 99% கட்டட பணிகளை முடித்ததுக்கு பிறகு ஒயிட் வாஸ், கலர் வாஸ் செய்து திறந்து வைத்தது அதிமுக என ராஜீவ் காந்தி மருத்துவமனை கட்டடங்களை அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது என தெரிவித்தற்கு அமைச்சர் பதிலடி கொடுத்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை என்று பெயர் வைத்ததே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். எனவே, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விபத்து நடைப்பெற்ற கட்டிடத்தை இடித்துவிட்டு 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனவும் அறிவித்தார்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…