கஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது …!அமைச்சர் ஜெயக்குமார்
கஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மீனவர்கள் நலனுக்காக ரூ.1300 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வாங்குவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். 877 நாட்டுப் படகுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.அவற்றுக்கு தலா ரூ.85000 வரை வழங்க வழியுள்ளது. இயந்திர படகுகளின் சேதத்துக்கு ரூ.3 லட்சம்வரை இழப்பீடு வழக்கினால் பழுது பார்க்கமுடியும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.