5 லட்சத்திற்கு வாட்ச் வாங்க 125 ஆடுகள் விற்றாக வேண்டும்.! அண்ணாமலை வாட்ச் குறித்து சிவசேனாபதி விமர்சனம்.!
5 லட்சத்திற்கு வாட்ச் வாங்க வேண்டும் என்றால் 125 ஆடுகள் விற்று இருக்க வேண்டும் என அண்ணாமலை வாட்ச் குறித்து புலம்பெயர் தமிழர் நலவாரியத் தலைவர் சிவசேனாபதி விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் விவகாரம் இன்னும் அரசியல் வட்டாரத்தில் புகைந்து கொண்டே இருக்கிறது. இந்த வாட்ச் குறித்து இன்று காங்கேயத்தில் புலம்பெயர் தமிழர் நலவாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், அண்ணாமலை அவர்கள், அந்த வாட்ச்சிற்கு பில் இருந்தால் காட்ட போகிறார். அவர் போலித்தனமாக தேச பக்தியை காட்டுகிறார். ஓர் பிரபல ஆங்கில வாசகம் ஒன்று உள்ளது அதில், நான் தேச பக்தி உள்ளவன் என்பது அயோக்கியனின் கடைசி ஆயுதம். ‘ என குறிப்பிட்டார்.
அவர் அந்த வாட்ச் 5 லட்சம் என்கிறார். இணையதளங்களில் அந்த வாட்ச் 12 லட்ச ரூபாய் என காட்டுகிறது. அவர் கூறியபடி 5 லட்சம் வாட்ச் என்றாலும், 125 ஆட்டுக்குட்டி விற்றுருக்க வேண்டும். அவருக்கு நாங்கள் நல்ல ஆடு மேய்ப்பவன் என்ற பட்டத்தை வழங்குகிறோம், என புலம்பெயர் தமிழர் நலவாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி குறிப்பிட்டார்.