தமிழகத்தின் எதிர்ப்பை காவிரி விவகாரத்திலும் தற்பொழுது மேகதாது விவகாரத்திலும் முரண்பாடான போக்கை கர்நாடக கடைபிடித்து வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கின் படி காவிரி தீர்ப்பாயம் என்று குழுவை மத்திய அரசு உச்சநீதி மன்ற உத்தரவின் பெயரில் அமைத்தது.
இந்நிலையிலும் காவிரி தொடர்பாக இன்று வரை பிரச்சனை இரு மாநிலங்களுக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.இந்நிலையில் காவிரி பிரச்சணை மட்டுமல்லாமல் புதியதாக மேகதாதுவில் ஒரு புதிய அணை கட்டுவதாக கூறி கர்நாடக அரசு அதற்கான திட்ட வரபடத்துடன் மத்திய நீர்வளத்துறை அணுகிய நிலையில் இசைவு கொடுத்த மத்திய நீர்வளமும் அணை கட்டும் முயற்சியை வலுப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் அணையை கட்டியே தீருவோம் என்று உறுதிப்பட தெரிவித்தார்.இந்நிலையில் தான் தற்போது மாநில முதல்வரே இது குறித்து வாய் திறந்துள்ளார்.இது குறித்து பேசிய அவர் மேகதாது விவகாரத்தை ஒரு கவுரவ பிரச்சனையாக பார்க்கக்கூடாது மேகதாதுவில் ஒரு புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசிடம் கர்நாடக 30 வருடங்களாக வலியுறுத்தி வருகிறது.
மேலும் காவிரி பிரச்சனையானது இரு மாநிலங்களுடையே கடந்த 125 வருடங்களாக இருக்கிறது.மேகதாது அணையானது உபரி நீரை சேமிக்கவே கட்டப்படுகிறது.இதனால் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசும் தமிழக மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குமாரசாமி தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் கர்நாடகாவும் தமிழகமும் இந்தியா, பாகிஸ்தான் ஒன்றும் அல்ல என்று கருத்து கூறிய குமாரசாமி நாங்கள் கட்டும் புதிய அணையில் இருந்து ஒரு போதும் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க மாட்டோம் மேலும் அணைக்கட்டு இல்லாததால் அந்த வழியாக தமிழகத்திற்கு வரும் காவிரி நீரானது பெருமளவு கடலில் வீணாக கலக்கிறது என்று தெரிவித்தார்.முதல்வரின் பேச்சியில் இருந்து மேகதாது அணை கட்டும் முயற்சியானது உறுதியுடன் முடிவாகியுள்ளது தெரிகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…