கஜா புயல் பாதிப்பால் 12000 மின்கம்பங்கள் சேதம்..! திருவாரூர் மாவட்ட மின் சீரமைப்புக்காக கூடுதல் மின் ஊழியர்கள் வருகை …!
திருவாரூர் மாவட்ட மின் சீரமைப்புக்காக கூடுதல் மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கஜா புயல் தற்போது கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இரவு 12.30 மணிக்கு கஜா புயல் நாகை வேதாரண்யம் இடையே கரையை கடக்க தொடங்கிய போது தீவிர புயலாக இருந்து பின் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்தது.
கஜா புயல் பாதிப்பால் 12000 மின்கம்பங்கள், 102 துணை மின் நிலையங்கள், 500 கி.மீ. மின் வழித்தடங்கள் பாதிப்படைந்துள்ளது. புயல் பாதித்த 7 மாவட்டங்களில் மின் சீரமைப்புப் பணியில் பணியாளர்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்ட மின் சீரமைப்புக்காக கூடுதல் மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் .