மதுராந்தகம் ஏரியை தூர்வார ரூ.120 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியை தூர் வார ரூ.120.23 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு.
தமிழக ஏரிகளிலேயே இரண்டாவது பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியை தூர் வாரினால் 7,604 ஏக்கர் நிலம் பயன்பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதராந்தகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில், ஏரியை தூர் வார நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நபார்டு வங்கியின் கடனை கொண்டு ஏரியை தூர் வாரி 3,950 மீட்டர் நீளமுள்ள கரையை பலப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.